ஈரோடு மாமன்ற கூட்டத்தில் கட்டண உயர்வு தீர்மானங்கள் மீண்டும் ஒத்திவைப்பு
ஈரோடு, ஜூன் 28- மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் குடிநீர், பாதாள சாக்கடை கட்டண உயர்வு தீர்மானம் ஈரோடு மாந கராட்சியில் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. ஆணை யாளர் அர்பித் ஜெயின் மற்றும் துணை மேயர் செல்வ ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 112 தீர்மானங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந் தன. இதில் முதல் இரண்டு தீர்மானங்களான குடிநீர் மற் றும் பாதாள சாக்கடைக்கான வைப்புத் தொகை மற்றும் கட்டண உயர்வு குறித்த தீர்மானங்கள், கடந்த மே 30, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்திலும் முன்மொழியப் பட்டு, மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் ஒத்திவைக் கப்பட்டிருந்தன. இந்தக் கூட்டத்திலும் அத்தீர்மானங் கள் மீண்டும் கொண்டுவரப்பட்டன. இந்த முறை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப் பினர்கள் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்தனர். இதுகுறித்து பேசிய உதவி ஆணையர் தன லட்சுமி, “இந்த இரு தீர்மானங்களுக்கும் ஏற்கனவே ஒப்பு தல் அளிக்கப்பட்டுவிட்டது. பல்வேறு திட்டங்களுக் காக நிதி தேவை இருப்பதால், இந்த தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம். இதர நகராட்சி கள் மற்றும் பேரூராட்சிகளுடன் ஒப்பிடுகையில், ஈரோட் டில் குறைவான குடிநீர் கட்டணமே நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது,” என்றார். திமுக கவுன்சிலர் ஜெகநாதன் பேசுகையில், “பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த பின்பு, அவர்களிடம் கட்டண உயர்வு குறித்து தெரிவித் தால், ஏற்றுக்கொள்வார்கள். எனவே, கட்டண உயர்வு தொடர்பான இரு தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும்,” என வலியுறுத்தினார். இதையடுத்து, மேயர் நாகரத்தினம், “குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை கட்டண உயர்வு தொடர்பான இரு தீர்மானங்களும் ஒத்திவைக்கப்படுவதாக” அறிவித்தார். இந்த இரண்டு தீர்மானங்கள் நீங்கலாக, மீதமுள்ள 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆம்புலன்ஸில் இருந்து தவறி சாலையில் விழுந்த நோயாளி
உதகை, ஜூன் 28- குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் உள்ள வேகத் தடையில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கும் போது வெளியே நோயாளி ஒருவர் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் ஓட்டுப்பட்டறையில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டவரை குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சேர்க்க தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அப்போது குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் போது வேகத்தடையில் ஏறி, இறங்கியது. ஆம்புலன்ஸின் பின் கதவு திடீரென திறந்தது. இதில், பயணம் செய்த நோயாளி ஸ்டெச்சருடன் சாலையில் விழுந்தார். இதனையடுத்து, ஆம்புலன்ஸின் பின்னே வந்த வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு உடல் நலம் பாதிக்கப் பட்டவரை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற ஆம்புலன்சில் இருந்து தவறி சாலையில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.