tamilnadu

img

உலக தரத்தில் சிறந்து விளங்கும் பட்டு உற்பத்தி தொழில்!

உலக தரத்தில் சிறந்து விளங்கும் பட்டு உற்பத்தி தொழில்!

கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட் டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை யின் பாலக்காட்டு கணவாய் வழியாக வரும் காற்றின் இத மான சூழலால், ஆண்டு முழுவதும் வெண் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், உலகத் தரத்தில் பட்டு உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுவதால், ஆயிரக்கணக்கான விவ சாயிகள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் பட்டு உற்பத்தி தொடங்கியதாக ஆய்வுகள் கூறு கின்றன. இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் மைசூரில் உள்ள ராஜாவுக்கு பட்டினால் ஆன ஆடைகள் வந்ததாக வரலாறு கூறுகிறது. ஆரம்பத்தில், வீடுகளில் வட்டத் தட்டுகளில் புழுக்களை வளர்த்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்பட்டது. காலப்போக்கில், பட்டுக்கூடு வளர்ப்பு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப் பட்டு, அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக, பட்டு வளர்ச்சித் துறை உருவாக்கப் பட்டது. முட்டை பொறிப்பு, புழு வளர்ப்பு ஆகியவை விவசாயிகளால் செய்யப்பட்டு வந்த நிலை யில், தற்போது இளம் புழு வளர்ப்பு மையங்கள் மூலம் புழுக்கள் பெறப்பட்டு பட்டுக்கூடு உற் பத்தி செய்யப்படுகிறது. 50-க்கும் மேற்பட்ட நாடு களுக்கு பட்டு ஏற்றுமதி செய்வதன் மூலம், நாட்டிற்கு அதிக அளவில் அன்னியச் செலா வணி கிடைக்கிறது. பட்டு உற்பத்தித் தொழில் விவசாயத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், விவசாயிகள் உலகத் தரத்தில் பட்டு உற்பத்தியை கொண்டு செல்ல புதிய தொழில்நுட்பங்களை ஏற்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.