திருப்பூர், டிச. 17 - மத்திய பாரதிய ஜனதா அரசின் நாசகரமான குடியுரிமை திருத்தச் சட்ட நகலை எரித்து திருப்பூரில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். நாட்டு மக்களை மதத்தின் அடிப்படை யில் பாகுபடுத்தி ஒற்றுமையைச் சீர்கு லைக்கும் குடியுரிமைத்திருத்தச் சட் டத்தை எதிர்த்து திருப்பூர் தியாகி குமரன் சிலை முன்பாக செவ்வாயன்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்துவதற்குத் திரண்டனர். மாவட்டத் தலைவர் ப.ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் ஆகியோர் தலைமையில் திரண்ட வாலிபர் கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து முழக்கம் எழுப்பினர். இப்போராட்ட அறிவிப்பையடுத்து உதவி ஆணையர் வெற்றிவேந்தன், காவல் ஆய்வாளர்கள் கணேசன், முனியம்மாள் ஆகியோர் தலைமையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். கண்டன முழக்கம் எழுப்பிய வாலிபர் சங்கத்தினர் குடியுரிமைத்திருத்தச் சட்ட நகலை தீ வைத்து எரிப்பதற்கு முயன்ற னர். அப்போது அங்கிருந்த காவலர்கள் வாலிபர்களைச் சுற்றி வளைத்து கைது செய்வதாக கூறினர். இதற்கிடையே நகலை எரிப்பதற்கு வாலிபர்கள் தீ வைத்தனர். ஆனால் சட்ட நகலை பறிப்பதற்கு காவலர் கள் எத்தனித்தனர். இதனால் இருதரப்பின ருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு பகுதியினர் நகலை எரித்த நிலையில் சிலர் சட்ட நகலை கிழித்து வீசினர். இந்நிலையில் போலீசார் வாலிபர் சங்கத்தினரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பிற்பகலில் விடுவிக் கப்பட்டனர்.