தாராபுரம், ஜூலை 2- தாராபுரத்தில், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இட மாறுதல் செய்யப்பட்ட தையடுத்து மாவட்ட புதிய துணை காவல் கண்காணிப்பாளர் பொறுப் பேற்றுக்கொண்டார். தாராபுரத்தில், மாவட்ட துணை காவல் கண்காணிப் பாளராக ஜெயராம் பொறுப்பேற்றார். தாரா புரத்தில், மாவட்ட துணை காவல் கண்காணிப் பாளராக பணியாற்றி வந்த வேலுமணி ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு, ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.