tamilnadu

img

உள்ளாட்சி பிரதிநிதி வெங்காய மாலையுடன் பதவியேற்பு

அவிநாசி, ஜன. 6- அவிநாசி அருகே பெரு மாநல்லூரில் ஊராட்சிமன்ற உறுப்பினர் வெங்காய மாலையுடன் பதவியேற் றார். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சி யின் 7வது வார்டு உறுப்பி னராக வெற்றி பெற்றவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த கவிதா மகேந் திரன். இவர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வெங்காய மாலையுடன் ஊர்வல மாக வந்்தார். இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். இதுகுறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் கவிதா கூறுகையில், வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசிற்கு நினைவூட்டும் வகையில் வெங்காய மாலை அணிந்து வந்ததாகக் கூறினார்.