tamilnadu

img

காட்டுப்பன்றிகளை பிடிக்க இரும்பு கூண்டு அமைப்பு

உடுமலை, டிச.12- விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையி னர் இரும்பு கூண்டு அமைத்துள்ளனர்.  ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியிலிருந்து வரும் காட்டுப்பன்றி கள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரு கிறது. இதனால் வனப்பணியாளர்கள் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக, காட்டுப்பன்றிகள் நடமாடும் இடங்களில் இரும்பு கூண்டு வைத்துள்ள னர்.  மேலும் பன்றிகள் விரும்பி உண்ணும் பழவகைகள், பிஞ்சு நிலையிலுள்ள மக்காச் சோளங்கள் மற்றும் தேங்காய்கள் வைக் கப்பட்டுள்ளது.  இதற்கிடையே, காட்டுப்பன்றிகள் போன்ற வன உயிரினங்களால் சேதங்கள் ஏற்பட்டால்  உடனடியாக சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலகங்களை தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்கள் வழங் கினால் உடனடியாக இழப்பீடு வழங்கப் படும் என வனத்துறை தரப்பில் அறிவிக் கப்பட்டுள்ளது.