புதன், பிப்ரவரி 24, 2021

tamilnadu

வாக்கு இயந்திரங்கள் பழுது தாமதமான வாக்குப்பதிவு

ஈரோடு, ஏப். 18-ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது. சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடிக்கு மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. இதனால் வாக்களிப்பதற்காக பொதுமக்கள் அவதியடைந்தனர்.இதேபோல் பவானிசாகர் அருகே உள்ள நடுநிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு துவங்கியது. தாளவாடி அருகே உள்ள தொட்ட காஜனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அங்கு வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது.

;