தருமபுரி, ஆக. 28- முதலமைச்சர் குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாம் கடத்தூர், பூகானஅள்ளி உள்ளிட்ட பேரூ ராட்சிகளில் புதனன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சியில் தமிழக முதலமைச்சரின் மக்கள் குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. துணைவட்டார வளர்ச்சி அலுவலர் மாதையன் தலைமை தாங்கி னார். பேரூராட்சி செயல் அலுவலர் எம்.விஜயன், வருவாய் ஆய்வாளர் எழில்மொழி, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்பாபு, பேரூராட்சி இளநிலை உதவி யாளர் மோகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்க ளைப் பெற்றனர். இதேபோல், நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூரில் நடைபெற்ற முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பெரியண்ணன் வருவாய் ஆய்வாளர் மகாராணி, கிராமநிர்வாக அலுவலர் முனுசாமி, ஊராட்சி செய லாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர். பாலக்கோடு வட்டம் பூகானஅள்ளியில் நடை பெற்ற முகாமிற்கு தாட்கோ மாவட்ட மேலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். பாலக்கோடு துயர் துடைப்பு வட்டாட்சியர் சேதுலிங்கம், வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் சிவபிரகாஷ், ரவி, ஊராட்சி செயலாளர் கொளந்தை சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.