tamilnadu

img

டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

அரூர், நவ.20-  அரூரை அடுத்த கெளாப்பாறையில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி புதனன்று நடைபெற்றது. அரூரை அடுத்த கெளாப்பாறையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு குறித்து மருத்துவத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.செந்தில்குமார்  துவக்கி வைத்தார். இப்பேரணியில் பய னற்ற நெகிழிப் பொருள்கள், டயர்கள், ஒரே  இடத்தில் தேங்கி  இருக்கும் மழைநீர் ஆகிய வற்றால் டெங்கு புழுக்கள் உருவாகும்  முறைகள், டெங்கு நோயினை தடுப்பதற் கான வழிகள், முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நடை பெற்றது. இதில் விழிப்புணர்வு குறித்த அட்டைகளை ஏந்தியவாறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கெளாப்பாறை மற்றும் எல்லப்புடையாம்பட்டி கிராமங் களில் உள்ள தெருக்களின் வழியாக பேரணி யாக சென்றனர். இந்த விழிப்புணர்வில் வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.தொல்காப்பியன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  டி.செல்வன், பூச்சியியல் வல்லுநர் ராம் குமார், காய்ச்சல் தடுப்பு மருத்துவ அலுவலர்  த.அழகரசன், ஊராட்சி செயலர்கள் எம்.பிரகாசம், முருகேசன், சத்யா, முரளிதரன், கௌதமன், பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.