வில்வித்தை சங்கம் மற்றும் இந்தியன் டைனமிக் விளையாட்டு அகாடமி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான வில் வித்தை போட்டியில் ஓசூர் ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 8 பேர் தங்கப் பதக்கம் வென்றனர். பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு பள்ளியின் தாளாளர் லயன் மு. எம்ஜியார் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் முனைவர் மேரி ஜேக்கப், நிர்வாக அலுவலர் பாஸ்கர், பயிற்சியாளர் தங்கம், விளையாட்டு ஆசிரியர் பசவராஜ், மோசினா, ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம் வென்ற தங்கங்களை பாராட்டினர்.