tamilnadu

img

அழிக்கப்படும் ஏரியும், தொன்மை நினைவுச் சின்னங்களும்

ஓசூர் நகரின் மையத்தில் சாராட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள ராமநாயக்கன் ஏரி. 1981-வாக்கில் இதன் பரப்பு 120 ஏக்கர். இன்று. அதில் பாதியாகி.. இருந்தாலே பெரிய விசயம்... ராஜாக்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரி பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கடல் போல் நீர் நிரம்பி இருந்ததது. நகரின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்க முக்கிய காரணியாகவும் இருந்தது. கரையின் உட் பகுதியில் சிறு கல் மண்டபமும் தரையின் சமதளத்தில் சிறு சதுர கல் நீர் வடிகாலும், மறுபக்கம் ஒரு கோவிலும் தெப்பக்குலமும் ஒரு மண்டபமும் என இப் பகுதியின் தொன்மை நாகரிகம், பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கியது.இந்நிலையில், ஏரியை ஒட்டிய தனியார் கல்வி நிறுவனத்திற்கும் சில தனியார் நிலங்களுக்கும் பாதுகாப்பாக சுமார் 2 கோடியில் நடைபாதை எனும் பெயரில் ஏரியின் பெரும் பரப்பளவு ஆக்கிரமிக் கப்பட்டது. நகராட்சி தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் தான் ஏரியை முடக்கும் பணிகள் தொடர்கிறது.தற்போது கரைமீது உள்ள சாலையை அகலப் படுத்துவதாகக் கூறி கரையின் உட்பகுதியில் சுமார் 30 அடி அகலத்தில் கரையின் நீலத் திற்கு ஆக்கிரமித்து சாலை போடும் பணி நடைபெற்று வருகிறதுதேர்தல் அறிவிப்பிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இப்பபணிகள் துவங்கப்பட்ட போதே சில அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர் கள் சாலை பணியை ஏரிக்குள் பாலமாக கட்டவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகளும், அமைச்சரும் ஆணையரும், சாராட்சியரும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஏற்கனவே, ஏரிக்கு வரும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வரண்டு கிடக்கிறது. சுமார் 60 லட்சம் செலவில் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து ஏரியை நிறப்புவதாக முன் னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி போட்ட திட்டம் ஒரே நாள் 3 மணி நேரம் தண்ணீர் வந்ததுடன் முடிந்துவிட்டது.


தற்போது ஏரிக்குள் நகரின் கழிவு நீரே நிற்கிறது. ஏரி நிறைந்தால் உபரி நீர் வெளியேரும் ராஜ கால்வாயும், இதே 8 ஆண்டுகளில் மிகச் சிறு கழிவு நீர் கால்வாயாக மாற்றப்பட்டுள்ளது. இப்படி காணாமல் போனவைகள் பட்டியலில் ஏரிக்குள் உள்ள தொன்மைச் சின்னமான சிரிய கல் மண்டபமும், சதுர சிரிய கல் படுக்கையும் இடம் பெற உள்ளது. ஏரிக்குள் மிகப் பெரும் பரப்பை ஆக்கிரமித்து மேடாக்கி போடப்பட்டு வரும் சாலை இந்த தொன்மை சின்னங்கள் அகற்றப் படுவதற்கு காரணமாக இருக்கப் போகிறது. இது குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ.மனோகரன் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆரம்பத்திலேயே புகார் அளித்துள்ளார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா தொன்மைச்சின்னங்கள் அகற்றப்பட்டுள்ள நிலை குறித்து கேள்வி எழுப்பியதற்கு மாவட்ட ஆட்சியர் இது குறித்து ஆய்வு செய்யப்படும் வரை வேலைகள் நிறுத்தி வைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.இந்நிலையில் தேர்தல் காலங்களிலும் நிறுத்தப்படாமல் சாலை போடும் பணிகள் தொடரப்பட்டு . . . கல் மண்டபத்தின் அருகில் பணிகள் நெருங்கி வந்து விட்டது.பாலமாக சாலை போடப் பட்டிருந்தால் ஏரியின் பரப்பளவும் கடுமையாக குறைந்திருக்காது. தொன்மை நினைவுச் சின்னங்களையும் அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் எது பற்றியும் அக்கரையில்லாமல் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், சேர்த்த சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளவும் மோடியின் கட்டளைக்காக மட்டுமே தலையாட்டும் அதிமுக ஆட்சியாளர்களுக்கு ஏரியாவது,. தொன்மை நினைவுச் சின்னமாவது ?.. எங்கு, எதைப்பார்த்தாலும் பணம், நிதியாக மட்டுமே அதிமுகவினர் கண்களுக்கு காட்சியளிக்கிறதே தவிர வேறில்லை.-ஒய். சந்திரன்

;