கிரிக்கெட் உலகில் அபாயகர மான அணியான தென் ஆப்பிரிக்காவின் பெயரைக் கூறினாலே மற்ற நாடுகள் நடுங்குவார்கள். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று பிரிவிலும் அந்த அணி வீரர்கள் மைதானத்தில் பம்பரமாகச் சுழலு வார்கள் என்பதால் உலக சாம்பி யன்கள் கூட தென் ஆப்பிரிக்கா அணி யிடம் தோல்வியைப் பரிசாகப் பெற்றுச் செல்வார்கள்.
மேற்கூறிய அனைத்தும் நாடு களுக்கு இடையே நடத்தப்படும் ஐசிசி சர்வதேச தொடர்களில் மட்டுமே. உல கக்கோப்பை தொடர்களில் அல்ல. சாதாரண ஐசிசி தொடர்களில் தனிக் காட்டு ராஜாவாக வலம் வந்தாலும் உலகக்கோப்பை என்றால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி தரும் மருந்தாகவே இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணி இனவெறி பிரச்சனைக்குப் பின்பு 1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் முதன்முதலாகக் களமிறங்கியது.
முதல் உலகக்கோப்பை தொடர் என்றாலும் பதற்றமின்றி அரை யிறுதி வரை சென்றது. மழை காரண மாக அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது. தொடர்ந்து 7 உலகக்கோப்பை தொடரில் (2016-ஆம் ஆண்டு வரை)பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி ஒரு முறை கூட கோப்பையை முத்த மிட்டது கிடையாது. பார்ம் நன்றாக இருந்தால் அரையிறுதி வரை சிக்கல் இல்லாமல் செல்லும். பார்ம் பிரச் சனை இருந்தால் குரூப் சுற்றோடு வெளி யேறிவிடும். பலமுறை அரையிறுதி சென்றும் மழை காவு வாங்கிவிட்டது. சரி, கடந்த கால வரலாற்றை 12-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் மாற்றி கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறையும் தென் ஆப்பிரிக்காவின் நிலை பரிதாபம் தான்.
நடப்பு சீசனில் காயம், பார்ம் பிரச்ச னையில் சிக்கித்தவித்த தென் ஆப்பிரிக்கா இதுவரை நடை பெற்ற 6 ஆட்டங்களில் 4-இல் தோல்வி யைத் தழுவியதால் லீக் சுற்றோடு வெளி யேறுகிறது. எஞ்சிய 3 ஆட்டங்கள் அந்த அணிக்குச் சம்பிரதாயமாக இருக்கும் என்பதால் இந்த ஆட்டங் களில் வெற்றி பெற்று கவுரவமான இடத்தை பிடிக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கனவு களோடு வருகிறார்கள்... கானல் நீரோடு செல்கிறார்கள்... தென் ஆப்பிரிக்கா அணிக்கு மட்டும் இந்த நிலைமை ஒவ் வொரு முறையும் எப்படி உருவாகிறது என்பது மட்டும் புதிராகவே உள்ளது.
தோல்விக்கான காரணம்?
தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடரில் சோபிக்காததற்கு முக்கிய காரணம் வீரர்களின் மனநிலை மட்டுமே. தென் ஆப்பிரிக்கா அணி ஐசிசி தொடருக்காக வேறு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொழுது சொந்த நாட்டில் விளையாடுவது போன்று விளையாடி வெற்றியைக் குவிக்கும். இதே பாணியில் தான் நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரிலும் களமிறங்கியது. இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 4 அணிகள் ஐசிசி தொடர்களுக்கு ஒருவிதமாகவும், உலகக்கோப்பை தொடருக்கு வேறுவிதமாகவும் ஆட்டத்திறனை வெளிப்படுத்தும். இந்த முறைகளைப் பின்பற்றாதது தான் தென் ஆப்பிரிக்கா அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். இது ஒருபுறமிருக்கக் காயம் வேறு தென் ஆப்பிரிக்கா அணியை அதிகம் பாதித்தது. முன்னணி பந்துவீச்சாளர் ஸ்டெயின், இளம் வீரர் நிகிடி ஆகியோரின் காயத்தால் சிக்கல் ஏற்படுத்த அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் நிர்வாக பிரச்சனை போன்றவை தென் ஆப்பிரிக்கா அணியின் உலகக்கோப்பை கனவைப் பறித்தது.