tamilnadu

குடிநீர் புகார்களுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு ஈரோடு மாநகராட்சி ஆணையர் தகவல்

 ஈரோடு, ஜூன் 20- ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் பிரச்சனை தொடர் பான புகார்கள் 24 மணி நேரத்தில் தீர்க்கப்படும் என புகார் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில், ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு 540 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, காவிரி ஆற்றில் சூரியம்பாளையத்தில் இருந்து வெண்டிபாளையம் வரையில் 9 இடங்களில் நீரேற்று நிலையம் அமைக்கப் பட்டு தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இது தவிர,  மாநகராட்சியில் மோட்டார் இணைப்புடன் 910 ஆழ் துளைக் கிணறுகளும், 820 அடிபம்புகளும் உள்ளன.  இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பகுதியில் ரூ.2.67 கோடி மதிப்பில் 22 இடங் களில் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 300 அடியில் இருந்து ஆயிரம் அடியில் தண்ணீர் கிடைக்கிறது. ஒரு வாரத்திற்குள் இப்பணிகள் நிறைவடையும்.  மேலும், குடிநீர் பிரச்சனையைக் கண்காணிக்க மாந கராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும், வார்டுக்கு ஒரு அலுவலர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்சனை  தொடர்பாக ஈரோடு கார்ப் வாட்டர் சப்ளை என்ற ஆப் மூல மும் புகார் தெரிவிக்கலாம். இது தவிர, குடிநீர் பிரச்சனை, குப்பை உள்ளிட்ட அனைத்து வகையான புகார்களையும் இலவச எண் 180042594890 ல் தெரிவிக்கலாம். 24 மணி  நேரத்திற்குள் குறைகளுக்குத் தீர்வு காணப்படும். இவ் வாறு அவர் கூறினார்.