tamilnadu

விவசாயிகள் பெயரில் வங்கிக் கடன் மோசடி ஆரூரான் ஆலை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தல்

இராமேஸ்வரம், ஜூன் 18- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாநிலக்குழுக் கூட்டம் மாநிலத் தலை வர் வி.சுப்பிரமணியன் தலைமையில் கடந்த இரண்டு நாட்கள்  நடைபெற்றது. தலைவர்கள் மூத்த தலைவர்கள் கே. வரதராசன், கே. பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் பெ.சண் முகம், பொருளாளர் கே.பி. பெருமாள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  கடலூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகள் விவசாயிகள் பெயரில் ரூ. 500 கோடி அளவில் கடனை அரசு டைமை வங்கிகளில் கடனாகப் பெற்று  மோசடி செய்துள்ளன. கும்பகோ ணத்தில் உள்ள கார்ப்பரேசன் வங்கி யில் மட்டும் 212 விவசாயிகளின் பெயரில்  ரூ. 45 கோடி ஆரூரான் சர்க்கரை ஆலை  கடன் பெற்றுள்ளது. ஆனால், வங்கி நிர்வாகங்கள் விவசாயிகளுக்கு கடன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.  இதுதொடர்பாக விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் ஆலை  அதிபர் மீது வழக்குப் பதிவு செய்துள் ளது. அதிபர் ராம் தியாகராஜனை காவல்துறை கைது செய்ய வேண்டும். வங்கிக் கடன் மோசடி தொடர்பாக விசாரித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்த ரூ.82  கோடி கரும்பு விவசாயிகளுக்கு 2 ஆண்டு களாகத் தரவில்லை. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி யும் விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கிக் கடன் முழுமையும் அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலை அதிபர்கள்  பெயரில் மாற்றம் செய்து விவசாயி களை கடனிலிருந்து விடுவிக்க வேண்டு மென வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம்  21 ஆம் தேதி விருத்தாச்சலம் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பாக நடைபெற வுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு தவிச மாநிலக்  குழு முழு ஆதரவை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் பவர்  கிரிட் நிறுவனமும் தமிழ்நாடு மின்  தொடரமைப்பு கழகமும் 13 மாவட்டங்க ளில் விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து வருவதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். மக்களவைத் தேர்தலுக்குப் பின்னரும் உயர்மின் கோபுரம் அமைப்பதை தீவிரப்படுத்தி உள்ளனர். இதை தடுக்கும் விவசாயிகளை மிரட்டுவது, சிறையில் அடைப்பது போன்ற காவல்துறை மற்றும் மாநில அரசின் நடவடிக்கைகளை தவிச மாநிலக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது. அரசு மாற்றுத் திட்டத்தை பரிசீலித்து விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும் 1885 ஆம் ஆண்டு தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இந்த  கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவ கங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய  மாவட்டங்கள் பயன்பெறும் காவிரி-வைகை, குண்டாறு-வைப்பாறுத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் துவங்க வேண்டும், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை கைவிடக்கோரி இம் மாதம் 3 ஆம் தேதி  விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் நடக்கும் மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை களை தூர்வார? தமிழக அரசு ஒதுக்கி யுள்ள ரூ.500 கோடி போதுமானதல்ல, ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், பல்லாயிரக்கணக்கில் உள்ளது, காவிரி  டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏ மற்றும்  பி பிரிவு வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்தாலும் கடைமடைப்பகுதிக்கு பாசனம் செய்ய முடியாது ஒதுக்கி உள்ள நிதியினை ஆளும் கட்சியினர் கொள்ளையடிக்கும் நிலையை தடுக்க பணி நடக்கும் இடங்களில் முன்கூட்டியே தகவல் பலகை வைப்பது, ஒப்பந்ததாரர் விபரம் தெரிவிக்க வேண்டும். பணிகள் நடைபெறும் இடங்களில் ஆய்வு செய்ய அதிகாரிகள்- பகுதி விவ சாயிகள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும், தூர்வாரும்  பணிக்கு தமிழக அரசு கூடுதல் நிதி  ஒதுக்கி பருவமழை துவங்கும் முன்னரே  இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்  என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.