முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- நான் இப்போது முதல்வராக உங்கள் முன் நிற்கவில்லை.
ச.சா - சீக்கிரம் முன்னாள் முதல்வர்ங்குற அந்தஸ்து வந்துரும்....!!!
*******************
பிரதமர் மோடி :- எனது புகழைக் கெடுப்பதே தனது நோக்கம் என்று ராகுல் கூறுகிறார்.
ச.சா - உங்க பொய்க்கு அளவில்லையா.. அவர் அப்புடி சொல்லலையே...!?!
*******************
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் :- சூலூரில் அதிமுக வெற்றி பெற்றால் இருகூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும்.
ச சா - மேம்பாடு அடையாம இருக்குறது உங்களாலதான...!?!?
*******************
காங்கிரஸ் :- முன்னாள் பாஜக தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் நிலத்தை மோடி அபகரித்துள்ளார்.
ச.சா - வேட்பு மனுல குறிப்பிட்டு சிக்கிக்கிட்டார்...!!!!!