states

img

விளைவித்த நெல்லுக்கு, தீவைத்த உ.பி. விவசாயி வேளாண் கொள்கைகளை மாற்றுமாறு பாஜகவுக்கு வருண் மீண்டும் அறிவுரை!

லக்னோ, அக்.25- ஒன்றிய அரசின் வேளாண் சட் டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் 4 பேர் உத் தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கார் ஏற்றிக் கொல்லப் பட்டனர். பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய உள்துறை இணைய மைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வின் மகன் ஆசிஷ் மிஸ்ரா தான், இந்த படுகொலையை அரங்கேற் றினார். இது எதிர்க்கட்சியினரை மட்டு மன்றி, பாஜக தலைவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக, பாஜக எம்.பி. வருண் காந்தி இந்த விவகாரத்தில் தொடர்ந்து ஒன்றிய அரசின் நட வடிக்கையை விமர்சித்து வரு கிறார். பாஜக தேசிய நிர்வாகக் குழுவிலிருந்து நீக்கப்பட்ட பின்ன ரும், வருண் காந்தி தனது விமர் சனத்தை நிறுத்திக் கொள்வதாக இல்லை. இந்நிலையில், போதிய விலை கிடைக்காததால், உ.பி.  விவசாயி ஒருவர், தான் விளை வித்த நெல்லுக்கு, தானே தீயிட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, மீண்டும் ஒன்றிய அரசை கண்டித்துள்ளார். “உத்தரப் பிரதேசத்தைத் சேர்ந்தவர் சமோத் சிங். விவசாயி யான இவர், தனது நெல்லைக் கொள்முதல் செய்யக் கோரி, கடந்த 15 நாட்களாக பல்வேறு கொள்முதல் நிலையங்களுக்கு அலைந்துள்ளார். எனினும், நெல் விற்பனையாகாத காரணத்தால் மனமுடைந்த அவா் அதனைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். எந்தத் தவறும் செய்யாத விவ சாயியை நாம் (ஒன்றிய பாஜக அரசு) கடைப்பிடிக்கும் செயல் திட்டம் எங்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்துள்ளது என்பதை நாம் (பாஜக) சுயமதிப்பீடு செய்ய வேண்டும். விவசாயம் செய்த விவசாயிக்கு இதைவிட மிகப் பெரிய தண்டனை கிடைக்கப் போவதில்லை.  நமக்கு உணவளிக்கும் விவ சாயிகளைப் பாதுகாக்கவில்லை என்றால் நாட்டில் உள்ள அனை வரின் தோல்வியாகவே இது கரு தப்படும். ஆகையால், விவசாயக் கொள்கைகள் மாற்றியமைக் கப்பட வேண்டியது அவசியம்” என்று டுவிட்டரில் வருண் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

;