states

img

உபி:ஆக்ஸிஜன் கிடைக்காமல் 10 நாட்களில் 6 பத்திரிகையாளர்கள் பலி

உத்தரபிரதேசத்தில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் 6 பத்திரிகையாளர்கள் உயிரிழந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோவின் ஜதீல் அமல் உருது பத்திரிகையின் செய்தியாளர் சச்சிதானந்த் குப்தா வெண்டிலேட்டர் கிடைக்காதது காரணமாக கடந்த 14ம் தேதி காலமானார்.
, லக்னோவின் மூத்த பத்திரிகையாளரான வினய் ஸ்ரீவாத்ஸவாவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார். உதவி கேட்டு, தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது ஊடகப் பிரிவினருக்கு ட்வீட் செய்து கொண்டிருந்தார். ஆனால் உரிய நடவடிக்கை இல்லாததால் வினய், பரிதாபமாக உயிரிழந்தார்.
‘பயனியர்’ ஆங்கிலே நாளேட்டின் அரசியல் செய்திப் பிரிவின் பொறுப்பாளரான தவிஷி ஸ்ரீவாத்ஸவா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி  ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்பட்டது. இதற்காக சக செய்தியாளர்கள் பல மணி நேரம் முயன்று பெற்றனர். தவிஷியை மருத்துவமனையில் அனுமதிக்க டெல்லியின் மூத்த பத்திரிகையாளர் தன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டி இருந்தது.
இதன் பலனாக, லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் தவிஷி சேர்க்கப்படுவதற்குள் அவர் பரிதாபமாக பலியானார். 
‘பயனியர்’ ஆங்கிலே நாளேட்டின் அரசியல் செய்திப் பிரிவின் பொறுப்பாளரான தவிஷி ஸ்ரீவாத்ஸவாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவருக்கு ஏப்ரல் 18-ம் தேதி அவசரமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்பட்ட து. இதற்காக சக செய்தியாளர்கள் பல மணி நேரம் முயன்று பெற்றனர். தவிஷியை மருத்துவமனையில் அனுமதிக்க டெல்லியின் மூத்த பத்திரிகையாளர் தன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டி இருந்தது. 
இதன் பலனாக, லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் தவிஷி சேர்க்கப்படுவதற்குள் அவர் பரிதாபமாக பலியானார். 
இளம் பத்திரிகையாளரான பவண் மிஸ்ராவிற்குத் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார். எனினும், பவணுக்குத் தேவைப்பட்ட வென்டிலேட்டர் கிடைக்காமல் அவர் இரு தினங்களுக்கு முன் பலியானார்.
ஒரு வாரமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட அங்கிட் சுக்லா (32), கடந்த புதன்கிழமை பலியானார். கொரோனா, உ.பி. அரசு அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் குழுவின் நிர்வாகக் குழுவிற்கு புதிதாகத் தேர்வான பிரோமத் ஸ்ரீவாத்ஸவாவையும் (42) விட்டுவைக்கவில்லை.
மேலும், சுமார் 15  பத்திரிகையாளர்கள்  லக்னோவில்  கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்திரிகையாளர்களின் உறவினர்கள் சுமார் 20 பேரும் கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

;