states

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைப்பு

மும்பை,நவ.26- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா, இந்திய கடற்  படையில்  இணைக்கப் பட்டது. இந்த கப்பலை கடற் படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இயக்கிவைத்தார். பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து 6 நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் பி-75 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, ஏற்கெனவே, 3 நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரித்து கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது நான்காவதாக ஸ்கார்பீன் வகை ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையுடன் இணைக்கப்பட்டது. மும்பை கப்பல் கட்டுமான தளத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சி யில் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், ஐஎன்எஸ் வேலா கப்பலை இயக்கி வைத்தார்.  பின்னர் அவர் பேசுகையில், இந்திய கடற்படை யின் செயல்பாடுகளை ஐஎன்எஸ் வேலா மேம்படுத்தும்.  பி-75 திட்டத்தால் இந்திய - பிரான்ஸ் ஒத்துழைப்பு உச்சத்தை அடைந்துள்ளது. இத்திட்டத்தில் பாதியை தாண்டி விட்டோம். ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம்தாங்கி போர்க் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக்  கப்பலின் கடல் சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடற்படையில் விக்ராந்த் போர்க் கப்பல் இணைக்கப்பட்டு விடும் என்று தெரிவித்தார்.

;