states

ரூ.50 லட்சத்திற்கு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்

மும்பை,செப்.23- மகாராஷ்டிரா  மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு பயிற்சி மையம் நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டது கண் டறியப்பட்டுள்ளது. பயிற்சி மையத்தில் பயின்ற ஐந்து  மாணவர்களின் பெற்றோர் களிடம் 50 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நீட்  தேர்வு எழுதியது அம்பல மாகியுள்ளது. இதற்காக மாணவர் களின் ஆதார் அட்டைகளின் தகவல்களைக் கொண்டு போலியாக அடையாள அட்டையைத் தயார் செய்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு  எழுதிய ஓ.எம்.ஆர் தாள் களில் போலியாகத் திருத்தம் செய்தும், ஹால் டிக்கெட்டு களில் மார்பிங் முறையில் புகைப்படங்களை மாற்றி யும் தேர்வு எழுத வைத்துள்ள னர். இதற்காக தேர்வு எழுதி யவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கியதை யும் சி.பி.ஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து மோசடி யில் ஈடுபட்ட  பயிற்சி மையத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மையத்தின் உரிமை யாளர் பரிமால் மீதும் ஆள்மாறாட்டம் செய்த விவ காரத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து மாணவர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

;