டாடா அறக்கட்டளையின் தலை வராக இருந்த ரத்தன் டாடா வயது முதிர்வு சார்ந்த உடல் நலக்குறைவு காரண மாக கடந்த புதனன்று இரவு காலமானார். இந்நிலையில், டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா தேர்வு செய்யப் பட்டுள்ளார். இவர் ரத்தன் டாடாவின் தந்தை நேவல் ஹெச் டாடாவின் இரண்டாவது மனைவியின் மக னாவார். ரத்தன் டாடாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்த நோயல் டாடா, ஏற்கனவே சர் டோ ராப்ஜி டாடா டிரஸ்ட், சர் ரத்தன் டாடா டிரஸ்ட் குழுவில் அறங்காவலராக உள்ளார். தற்போது நோயல் டாடா டைட்டன் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவ னத்தின் துணைத் தலைவராக உள்ளார். மேலும் அவர் ஜூடியோ மற்றும் வெஸ்ட் சைட் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான டிரெண்டின் தலைவராக வும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.