states

img

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிறையிலுள்ள ஆரியன்கான் ஜாமீன் மனு விசாரணை ஒத்தி வைப்பு

மும்பை, அக்.26- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் ஷாருகான் மகன் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மும்பை நீதிமன்றம் புதன்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தது. ஆர்யனுக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. ஆர்யன் கானின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். ஆர்யான்கானுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் சம்பந்தமில்லை. சம்மந்தப்பட்ட கப்பலுக்கு ஆர்யன் விருந்தினராகத்தான் அழைக்கப்பட்டார். அந்த இடத்திற்கு அர்பாஸ் என்ற வியாபாரியும் வந்திருந்தார். இருவரும ஒரே நபரால் அழைக்கப்பட்டுள்ளனர். அர்பாஸ் ஆரியன்கானின் வேலைக்காரரும் அல்ல. அவர் ஆரியன்கானின் கட்டுப்பாட்டிலும் இல்லை என்றார். ஆரியான்கானிடமிருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. போதை மருந்து உட்கொண்டிருந்தார் என்பதை நிருபிக்க அவர் மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை. இந்த வழக்கு ஆர்யன்கானின் பெற்றோரால் மட்டுமே பொதுமக்களின் பார்வையையும் ஊடக கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றும் முகுல் ரோத்தகி கூறினார்.  இந்த வழக்கின் மீது ஜாமீன் வழங்கலாம். இது ஜாமீன் வழங்கக் கூடிய வழக்குதான் என்றும் கூறினார். இதையடுத்து ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மும்பை உயர்நீதிமன்றம் புதன்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்துள்ளது.

;