states

img

மணிப்பூரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்

மணிப்பூரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 
மணிப்பூர் மாநிலம் உக்ருல் பகுதியில் 56 கிமீ தொலைவில் 70கிமீ ஆழத்தில் இன்று காலை 7.48 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
மணிப்பூரில் சமீபத்தில் தொடர் நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 4.3 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

;