states

img

காவி நிறத்தில் குடுமி-பூணூலோடு பிராமின் நொறுக்குத் தீனிகள்

பெங்களூரு, பிப். 2 - கர்நாடகா மாநிலத்தில், ‘பிரா மின்ஸ் குக்கீஸ்’ (பிராமணர்களுக் கான நொறுக்குத் தீனிகள்) என்ற பெயரில், நொறுக்குத் தீனி  தயாரிக்கப்பட்டதும், அது விளம்பரப்படுத்தப்பட்டதும் தற் போது கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. தனியொரு சாதிக்கென, இவ்வாறு நொறுக்குத் தீனி தயாரிக்கப்பட்டது, மீண்டும் சாதி யத்தை வலுப்படுத்தும் முயற்சி என்றும், இது மிகவும் கேவலமான செயல் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பெங்களூருவில், ‘ப்ரெடீஸ் பேக்கிங் ஸ்டூடியோ’ (Freddie’s Baking Studio) எனும் நிறுவனம் பிரபலமான பேக்கரி நிறுவனங் களில் ஒன்றாகும். இந்நிறுவனம் குழந்தைகளுக்கான பிஸ்கெட்டு களை பிரத்யேகமாக தயாரித்து வருகிறது.  இந்நிலையில்தான், இந்த நிறுவனம் தற்போது ‘பிராமின்ஸ் குக்கீஸ்’ எனும் பிரத்யேக பிஸ்கெட்டுகளை தயாரித்துள்ளது. அந்த பிஸ்கெட்டுகளில் மொட்டை யடிக்கப்பட்ட தலை, பூணூல், குடுமி,  காவி உடை என பிராமணர் களுக்கான அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பிஸ்கெட்டை ப்ரெடீஸ் பேக்கிங் ஸ்டூடியோ நிறுவனம், சமூக வலைதளங்களில் வெளியிட்டு, “ஒருவருடைய பாரம்பரியங்களை பிஸ்கெட்டாக மாற்றுவது என்பது அவர்களுக்கு பிடித்தமான விஷ யங்களில் ஒன்றாகும். அந்த வகை யில், இணையவாசிகள் தங்களின் வினோதமான குக்கீ திட்டங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்” என கேட்டுக் கொண்டது.  

அதாவது, தற்போது பூணூல், குடுமி, காவி உடையுடன் ‘பிராமின் குக்கீ’யைத் தயாரித்துள்ளோம். தேவைப்பட்டால் அவரவரின் சாதி, பாரம்பரியம், எண்ணங்களை தெரியப்படுத்தினால், அந்த அடையாளங்களையும் பிஸ்கட்டாக மாற்றித்தர தயாராக இருக்கிறோம் என்று கூறியது.  இதுதான் கர்நாடகம் மட்டுமன்றி, நாடு முழுவதும் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. உண்ணும் உணவில் கூடவா சாதி வெறியைப் புகுத்துவீர்கள் என்று  ‘ப்ரெடீஸ் பேக்கிங் ஸ்டூடியோ’ நிறு வனத்திற்கு பலரும் கண்டனங் களைத் தெரிவித்து வருகின்றனர். “சாதிய அமைப்பை பாதுகாப்ப தற்கு, சாதிய மேலாதிக்க கூட்டம் புதிய புதிய வழிகளைக் தேடுகிறது. அதில் இந்த குக்கீஸும் ஒன்று” என சமூகவலைதளங்களில் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். பெங்களூருவில் பிராமண உண வகம் (Brahmin Eateries), பிராமின்ஸ் தட்டு இட்லி, பிராமின்ஸ் எக்ஸ்பிரஸ், அம்மா  பிராமின்ஸ் கபே என்ற பெயர்களில்  ஏற்கெனவே உணவகங்கள் செயல்பட்டு வருவதைக் குறிப்பிட்டு,  ‘பிராமண உணவு’ என சொல்வ தற்கு என்ன இருக்கிறது? பிராமண உணவு என தனித்துவப்படுத்துவது ஏன்? இது சாதிவெறி அன்றி வேறில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த பிஸ்கெட்டுகளை தனிநபர்  ஒருவர் தனது வீட்டில் நடந்த பூணூல் அணியும் விழாவுக்காக ஆர்டர் கொடுத்ததாக சொல்லப்படு கிறது. எனினும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது ‘பிராமின் குக்கீஸ்’ புகைப்படங்களை, ப்ரெடீஸ் பேக்கிங் ஸ்டூடியோ நிறுவனம் நீக்கியுள்ளது.