states

img

100 நாள் வேலைக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள்.... பாஜக ஆட்சியில் நிலவும் வேலையில்லாக்கொடுமை.....

பெங்களூரு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட் டுள்ளன. மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டமும் வறுமையும் அதிகரித்துள்ளது. படித்த பட்டதாரிகள் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் கூலி வேலைக்குசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளால் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாவேரிமாவட்டத்தில் இளங்கலை முதல் பிஎச்.டி வரை படித்துள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (100 நாள்வேலை) வேலை கேட்டு விண் ணப்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ஹாவேரி மாவட்ட ஊரக வேலை நிர்வாக அதிகாரி முகமது ரோஷன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது ஏராளமான படித்த இளைஞர்கள் வேலை இழந்து சொந்த கிராமங்களுக்கு திரும்பினர். கடந்த ஓராண்டாக நிறுவனங்கள் பழைய நிலைக்கு திரும்பாததால் அவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை நிலவுகிறது. இதனால் ஹாவேரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு3,649 பட்டதாரிகள் ஊரகவேலைக்கு விண்ணப்பித்தனர்.இந்த ஆண்டு 4,842 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். மல்குந்த் கிராமத்தில் மட்டும் 24 முதுகலை பட்டதாரிகள், 2 பிஎச்.டி படித்தவர்கள் ஊரகவேலைக்காக விண்ணப்பித் துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் வேலையில்லாக்கொடுமைக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்தான். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மோடி அரசு, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்ற வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப்போகிறது?என்று மக்களும் இளைஞர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

;