states

img

வரவர ராவுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வரவரராவுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீமா கொரேகானில் கடந்த 2018 ஜனவரி 1ம் தேதி கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200 வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பீமா கொரேகானில் வன்முறை வெடித்தது. இந்த வழக்கில் சமூக போராளிகள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 16 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ்,  ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன், கன்சால்வஸ் மற்றும் வேறு சிலரை காவல்துறையினரும், தேசிய புலனாய்வு ஏஜென்சியும் கைது செய்துள்ளனர்.
இவர்களில் ஸ்டான் சுவாமி சிறையில் இருந்த போது ஜாமின் வழங்க கோரியும், ஸ்ட்ரா டம்ளர் வழங்க கோரியும் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் டம்ளர் வழங்க கூட  மறுத்த நிலையில் சிறையிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது வரவர ராவ் உடல் நிலையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

;