states

img

தில்லி விவசாயிகள் பேரணி: காவல்துறை தாக்குதலில் ஒருவர் பலி

தில்லியில் விவசாயிகள் பேரணியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாத விவசாயிகள்  60 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 70க்கும் மேற்பட்டோர் போராட்டக்களத்திலேயே உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். மத்திய அரசுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒரு குழுவினர் தில்லி செங்கோட்டையை அடைந்துள்ளனர். 
இந்நிலையில் காவல்துறை தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இதைத்தொடர்ந்து தில்லியின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தில்லியின் பல பகுதிகளில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
 

;