states

img

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட் செய்த மியா கலீஃபா, ரிஹானா 

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மியா கலிஃபா, ரிஹானா ஆகியோர் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். 

மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடந்த 10க்கும் மேற்பட்ட பேச்சு வார்த்தையில் தோல்வி ஏற்பட்டுள்ள நிலையில் வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போராடும் விவசாயிகளை ஒடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு உலகின் பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மியா கலீஃபா, "என்ன மாதிரியான மனித உரிமை மீறல் இது? புதுதில்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது" என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
ஏற்கனவே டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஹானா, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

;