states

img

கொரோனா தடுப்பூசி செலுத்துவத்தில் மத்திய அரசு தோல்வி- பா.சிதம்பரம் சாடல்

நாட்டு மக்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35871 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 172 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்த சூழல் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது சுட்டுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது
ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்த்தொற்றின் விகிதம் அதிகரித்து வருகிறது. இது குறித்து யாரேனும் சிந்திக்கிறீர்களா?
5.9 கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஆனால், இந்தியர்களுக்கு இதுவரை 3 கோடி கொரோனா தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதில் ஏமாற்றமடைகிறேன்.
தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசிக்கு மத்தியிலுள்ள போட்டியில் கொரோனாதான் மக்களை வெல்கிறது. மக்களுக்கு தேவைக்கேற்ப கொரோனா தடுப்பூசிகளை போட வேண்டும். கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு போன்ற அதிகாரப்பூர்வ தடைகளை விலக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

;