states

img

பேஸ்புக் பயனர்களின் தனி தகவல்களை திரட்டிய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ வழக்குப்பதிவு

இந்திய பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடிய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இங்கிலாந்தைச் சேர்ந்த அரசியல் ஆலோசனை நிறுவனம் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா. உலகின் பல நாடுகள் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் தேர்தல், வெற்றி தோல்விகளை முடிவு செய்ய உதவுகிற அல்லது மக்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்துகிற வேலையை செய்து வந்தது.
அமெரிக்கா, இங்கிலாந்தில் நடந்த தேர்தல்களின்போது, ‘பேஸ்புக்’ உபயோகிப்பாளர்கள் 5 கோடிக்கும் மேற்பட்டோரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து நடந்த ஆய்வில் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்களை திருடி உள்ளதாக தெரியவந்தது. இதை ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் ஒப்புக்கொண்டார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிறுவனம் இந்திய பேஸ்புக் பயனர்களில் 5 லட்சத்து 62 ஆயிரம் பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பேஸ்புக்கில் 335 பயனர்கள் மூலம் அவர்களது பேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த 5 லட்சத்து 62 ஆயிரம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது.
பேஸ்புக் பயனர்கள் ’லைக்’ செய்யும் பக்கம், அதில் வரும் அரசியல் ரீதியிலான பக்கங்களை கொண்டு அதன் அடிப்படையில் பயனர்களின் அரசியல் கண்ணோட்டம் எந்த அளவில் உள்ளது என பல்வேறு தகவல்களை அவர்களின் பேஸ்புக் செயல்பாடுகள் மூலம் கண்டறிந்து குறிப்பிட்ட அரசியல் கட்சியினருக்கு சாதகமாக வாக்களிக்கும் மனநிலையை உருவாக்குவது தெரியவந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த சிபிஐ விசாரணை நடத்துமென மத்திய தகவல்தொழில் நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பேஸ்புக்கில் இருந்து இந்திய பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக திருடிய வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது நேற்றுசிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

;