states

img

தில்லி பேரணி போராட்டம்: 550 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்

தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலை தொடர்ந்து வன்முறையை தொடர்ந்து  டுவிட்டர் நிறுவனம் 550 ட்விட்டர் கணக்குகளை நீக்கியுள்ளது.
'தில்லியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பல பகுதிகளில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால்  ஆங்காங்கே வன்முறை வெடித்தது. இதையடுத்து தலைநகர் தில்லி பதற்றமான சூழல் ஏற்பட்டது. பல பகுதிகளில் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளின் பேரணியை கலைக்க முற்பட்டனர். ஆனால், செங்கோட்டை வரை விவசாயிகள்  பேரணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இணைய சேவை துண்டிக்கப்பட்டது. தில்லியின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதில் காவல்துறையினர் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். 
இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் 550 ட்விட்டர் கணக்குகளை நீக்கி உள்ளது. அந்த கணக்குகள் ஊடகக் கொள்கையை மீறுவதாகக் கண்டறியப்பட்ட ட்விட்டுகளையும் நீக்கியுள்ளது.
வன்முறை, அச்சுறுத்தல் போன்று நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் படியான கருத்துகள், மற்றும் அவர்களது கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தில்லி வன்முறை குறித்து நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். விழிப்புடன் இருக்கிறோம். விதிமுறைகளை மீறும் கணக்குகள் குறித்து பயனர்கள் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்

;