states

img

காலில் விழுந்து அழுது வாக்கு கேட்ட பாஜக வேட்பாளர்.... தெலுங்கானா இடைத்தேர்தலுக்காக போட்ட நாடகம்....

ஹைதராபாத்:
தேர்தலில் வெற்றிபெறுவதை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும் கட்சியாக பாஜக மாறியுள்ளது. அதற்குத் தேவை அதிகாரம். அதைப் பெறுவதற்காக- அவர்களின் குலகுருவான சாணக்கியர் கூறியபடி சாம-பேத-தான-தண் டம் என அத்தனை வழிகளையும் கையாளும். 

கெஞ்சிக் கூத்தாடுவது, லஞ்சம்கொடுத்து ஏமாற்றுவது, மிரட்டிப்பயமுறுத்துவது; தாக்குதல் நடத்துவது என்று எந்த வகையிலேனும் வெற்றியைப் பெறுவதை மட்டுமேநோக்கமாகக் கொண்டு, இந்தியாவின் பெரும்பகுதி மாநிலங்களைக்கைப்பற்றி விட்டது. தென்னிந்தியாவும், வடகிழக்கு மாநிலங்களும் மட்டுமே அக்கட்சிக்கு இன்னும் பிடிகொடுக்காத மாநிலங்களாக உள்ளன. இங்கும் அழுது அழுதாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.கர்நாடகத்திற்கு அடுத்ததாக தெலுங்கானாவை குறிவைத்துள்ள பாஜக, 2019 ஜனவரியில் துப்பாக் சட்டமன்றத் தொகுதியை மட்டும்கைப்பற்றியது. அடுத்த 3 மாதங்களில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 4 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியது. 2020 டிசம்பரில் நடந்த ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் 48 கவுன்சிலர்களை வென்றது.

தற்போது, நாகார்ஜுனா சாகர்சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இதிலும் எப்படியாவது வெற்றிபெறத் துடிக்கிறது. இங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் பனுகோத்து ரவிகுமார் நாயக், ஒவ் வொரு வாக்காளர்களின் காலிலும் விழுத்து கதறி அழுது வாக்கு சேகரிக்கும் தந்திரத்தை கையில் எடுத்தார். ஒரு மருத்துவரான ரவிகுமார்நாயக், இவ்வாறு செய்வது மக்களிடம் அவருக்கு அனுதாபத்தை ஏற்படுத்தும் கணக்குப் போட்டு பாஜகஇந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

;