states

img

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அவசியம்

காரல் மார்க்ஸ் வரிகளை மேற்கோள்காட்டிய தலைமை நீதிபதி என்.வி.

புதுதில்லி, செப்.26- “வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பொருளில் கார்ல்மார்க்ஸ், “உலகத் தொழிலாளர்களே, ஒன்று படுங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஒன்று மில்லை, அடிமைச் சங்கிலியைத்  தவிர” என்று கூறியிருக்கிறார். இதையே  நான் சற்றுமாற்றிச் சொல்ல விரும்பு கிறேன்: “உலகப் பெண்களே, ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத்  தவிர ” என்று கம்பீரத்துடனும் உரிமை யுடன் கூடிய வேண்டுகோளுடனும் தனது உரையைத் துவக்கினார் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா. “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீங்கள் ஒடுக்கப்பட்டது போதும் இப்போது நீதித்துறையில் 50சதவீதம்  பிரதிநிதித்துவத்தை பெண்கள் பெறு வதற்கான தருணம் வந்துவிட்டது. இது உங்களது உரிமை. இது ஒருபோதும் யாரோ ஒருவர் உங்களுக்காக தயை கூர்ந்து அளிக்கும் சன்மானம் அல்ல” என்றும் நீதிபதி ரமணா கூறினார்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய நீதித்துறையிலும் நாடு முழுவதும் உள்ள சட்ட கல்லூரிகளிலும் பெண் களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தினார். சமீபத்தில், தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான கொலிஜி யம் அமைப்பு, ஒன்பது புதிய நீதிபதி களை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை த்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், ஒரே நேரத்தில் ஒன்பது நீதிபதிகளும் பதவியேற்று கொண்டனர். புதிய நீதிபதிகளை வர வேற்கும் வகையிலும் ரமணாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் நோக்கிலும் உச்ச  நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், கலந்து கொண்டு பேசிய  ரமணா, “50 சதவிகித இட ஒதுக்கீடு  உங்களின் (பெண்கள்) உரிமை. நீதி மன்றங்களிலும் சட்டக் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீட்டைக் கோருவதற்கு உங் களுக்கு முழு உரிமை உண்டு. கீழமை நீதிமன்றங்களில் 30 சதவிகிதத்திற்கு குறைவாகவே பெண் நீதிபதிகள் உள்ளனர்.

உயர்நீதிமன்றங்களில் 11.5 சதவிகிதம் மட்டுமே பெண் நீதிபதிகள் உள்ளனர். உச்ச நீதிமன்றங்களில் 11 முதல் 12 சதவிகிதம் மட்டுமே உள்ள னர். நாட்டில் உள்ள 17 லட்சம் வழக்கறி ஞர்களில் 15 சதவிகிதம் மட்டுமே பெண்கள். இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தில் (பார்) ஏன் ஒரு பெண் பிரதிநிதி கூட இல்லை. இந்தப் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு தேவை” என்றார்.  “ஒரு ஆய்வறிக்கை எனக்கு கிடைக்கப்பெற்றது. அதன்படி, நமது  6 ஆயிரம் விசாரணை நீதிமன்றங்களில் 22சதவீத கட்டிடங்களில் பெண்களுக் கென்று கழிப்பறை எதுவும் இல்லை” என்று குறிப்பிட்ட நீதிபதி ரமணா, நெருக்கடியான வேலை சூழல், வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு  கழிவறைகள் மற்றும் குழந்தைகள் பாது காப்பு மையம் போன்ற உட்கட்டமைப்பு இல்லாததைச் சுட்டிக்காட்டிய அவர், பெண் வழக்கறிஞர்கள் எத்தகைய சவால்களை சந்திக்கின்றனர் என்பதை யும் சுட்டிக்காட்டியதோடு உள்கட்ட மைப்பு பிரச்சனைகளை தீர்க்க தாம் முயற்சிப்பதாகவும் கூறினார். சில மாநிலங்கள், இடஒதுக்கீடு கொள்கையின் காரணமாக அதிக (பெண்கள்) பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தலாம், ஆனால் உண்மையில்  சட்டத்துறைக்கு அதிக ளவில் பெண்கள் வரவேண்டும். அதை  நான் வரவேற்கிறேன் என்ற அவர், “இன்று (ஞாயிறு) மகள்கள் தினம். உங்கள் அனைவருக்கும் எனது மகள் கள் தின வாழ்த்துக்கள்” என்றார்.

;