states

பிறப்பு, இறப்பு பதிவுப் பணியை ஒன்றிய அரசே மேற்கொள்வதா?

புதுதில்லி, அக்.28-  தற்போது மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் பிறப்பு,  இறப்புப் பதிவுகளை ரத்துசெய்து விட்டு தேசிய அளவில் தானே மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் சட்டத்திருத்தங்கள் கொண்டுவர  ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கை க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: பிறப்பு, இறப்புப் பதிவுகள் தொடர்பான தரவுத்தளத்தை தேசிய மட்டத்தில் மேற்கொள்வதற்கு வகை செய்யும் விதத்தில் சட்டத்தில் திருத்த ங்கள் கொண்டுவர ஒன்றிய அரசு உத்தேசித்திருப்பது, தேவையற்ற நடவடிக்கையாகும்.தற்சமயம் பிறப்பு இறப்புப் பதிவுகள் மாநில அரசாங்கங்களின் வரையறையின் கீழ் இருந்து வருகின்றன.

1969 ஆம் ஆண்டு பிறப்பு, இறப்புப் பதிவுச் சட்டத்தில் இதற்கான தரவுத் தளத்தை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்வதற்கு வகை செய்யும்  விதத்தில் முன்மொழியப் பட்டிருக்கிற திருத்தங்கள், தேசிய குடிமக்கள் பதிவு (NRC-National Register of Citizens)கள் தயாரிப்ப தற்கு அடிப்படையாக விளங்கும் தேசிய மக்கள் தொகைப் பதிவினை (NPR-National Population Register) மேம்படுத்துவதற்கு வசதி செய்து கொடுப்பதற்காக இந்தத் திருத்தம்  செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு தேசிய மக்கள்தொகைப் பதிவு, தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவற்றுடன் குடிமக்கள் திருத்தச் சட்டமும் (Citizenship Amendment Act) கொண்டுவரப்படுவது மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி, ஒதுக்கி வைப்பதற்கான நட வடிக்கையேயாகும். மேலும் இவ்வாறு இதனை  ஒன்றிய அரசு எடுத்துக்கொள்வது ஏற்கனவே மக்களைக் கண்காணி ப்பதற்காக இருந்துவரும் நட வடிக்கைகளை மேலும் வலுப் படுத்துவதற்கான நடவடிக்கையு மாகும். பிறப்பு இறப்புப் பதிவுகள் ஏற்கனவே இருந்துவருவதுபோல் மாநில அரசுகளின் அதிகாரவரம்பு எல்லைக்கு உட்பட்டுத் தொடர வேண்டும் .  இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)

;