states

img

இந்தியாவில் புதிய வகை கொரோனா இல்லை

புதுதில்லி,நவ.26- இந்தியாவில் இதுவரை புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் எதுவும் இல்லை என்று ஒன்றிய  சுகாதாரம்- குடும்ப நலத்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் பி.1.1.529 என அடையாளம் காணப்பட்ட புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அங்குள்ள விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் இருந்து பயணிகள் வருவதற்கு ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன. இதனையடுத்து இந்திய  அரசும், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை கடுமையாக பரிசோதனை செய்து, தொற்று இருந்தால் அதனை தெரிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தெரிவித்துள்ளது.  இந்தியாவில்  இதுவரை புதிய வகை உருமாற்ற கொரோனா  எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று ஒன்றி சுகாதாரத்தறை அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தனர்.  பரிசோதனையை தீவிரப்படுத்த அறிவுறுத்தல் இந்தியாவில் தற்போது 99 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய கொரோனா உருமாற்றம் காரணமாக விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளை, குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து விமான நிலையங்களுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

;