states

img

நிரம்பாத சிலிண்டர்கள் 5 கோடி

எரிவாயு (LPG) இணைப்பை இலவசமாக வழங்கும் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ (PMUY) திட்டத்தை நரேந்திர மோடி  அரசு ஜம்பமாக அடித்துவருகிறது. ஆனால், இந்த திட்டம் அப்படி யொன்றும் ஏழைக் குடும்பங் களுக்கு பயனளித்து விடவில்லை என்பதை புள்ளிவிவரங்கள் புட்டு புட்டு வைக்கின்றன. இணைப்பை இலவசமாக கொடுத்தாலும், எரிவாயு விலை உயர்வால், ஒருமுறை சிலிண்டர் பெறும் பயனாளிகள் மறுமுறை சிலிண்டர்களை மறுநிரப்புதல் செய்ய முடிவதில்லை என்பதற்கு ஒன்றிய அரசின் தரவுகளே சாட்சி யாக மாறியிருக்கின்றன.

“2021-22 நிதியாண்டில் மட்டும் 92 லட்சம் வாடிக்கை யாளர்கள் தங்களின் சிலிண்டர் களை மறுநிரப்புதல் செய்ய வில்லை. 1 கோடியே 8 லட்சம் வாடிக்கையாளர்கள் ஒரே ஒரு  மறுநிரப்புதலை (எரிவாயு இணைப் பின்போது வழங்கப்படும் சிலிண்ட ரை மட்டும்) எடுத்துள்ளனர். அதா வது, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழுள்ள 9 கோடியே 34 லட்சம்  பயனாளிகளில் 2 கோடிப் பேர்  அதிக பட்சமாக ஒரு மறுநிரப்புதலை மட்டுமே எடுத்துள்ளனர்” என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் டெலி ஆகஸ்ட் 1 அன்று மாநிலங்களவையில் அளி த்த அறிக்கையில் தெரிவித்துள் ளார். 

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பிரமோத் திவாரி ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் டெலி இந்த விவரங்களை வழங்கி யுள்ளார். இதேபோல 2017-18 நிதியாண்டில் 1 கோடியே 65 லட்சம்  பயனாளிகள், 2018-19 நிதி யாண்டில் 4 கோடியே 14 லட்சம் பயனாளிகள், 2019-20 நிதியாண்டில் 3 கோடியே 24 லட்சம் பயனாளிகள், 2020-21 நிதியாண்டில் 70 லட்சத்து 70 ஆயிரம் பயனாளிகள் ஒரு முறைகூட மறுநிரப்புதல் செய்ய வில்லை அல்லது ஒரு முறை  மட்டுமே மறுநிரப்புதல்செய்துள்ள னர். 2019-20ல் எந்த மறு நிரப்புத லையும் எடுக்காத பயனாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்துள்ளது. இந்த ஆண்டில் 1 கோடியே 41 லட்சம் பயனாளிகள் எந்த மறு நிரப்புதலையும் எடுக்கவில்லை. 

அமைச்சரின் அறிக்கை யின்படி, 2019-20 நிதியாண்டில்தான் எந்தவொரு மறு நிரப்புதலையும் எடுக்காத பயனாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்துள்ளது. அதேபோல, ஒரே  ஒரு மறுநிரப்புதலைக் கூட செய்யாத பயனாளிகளின் எண்ணிக்கை 2018-19ஆம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 2 கோடியே 90 லட்சம் பேர் என்ற அளவிற்கு இருந்துள்ளது.  2021-22 ஆம் ஆண்டில் செயல்பாட்டில் உள்ள 30 கோடியே  53 லட்சம் உள்நாட்டு வாடிக்கை யாளர்களில் 2 கோடியே 11 லட்சம் மறுநிரப்புதல் செய்யவில்லை. 2 கோடியே 91 லட்சம் பேர் ஒரு  மறுநிரப்புதல் மட்டுமே பெற்றுள்ள னர். அதாவது, கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 5 கோடியே 02 லட்சம் வாடிக்கை யாளர்கள் ஒருமுறை மட்டும் மறு நிரப்புதல் செய்துள்ளனர் அல்லது ஒருமுறை கூட மறுநிரப்புதல் செய்யாமல் இருந்துள்ளனர். இந்த  5 கோடியே 02 லட்சம் வாடிக்கை யாளர்கள் என்பது, ஒட்டுமொத்த மான 30 கோடியே 53 லட்சம் வாடிக் கையாளர்களில் 16.44 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிவாயு சிலிண்டர்களை மறு நிரப்புதல் செய்யாததற்கு அதன் அதிக விலையே காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டாக்டர் வி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு பதி லளித்திருக்கும் அமைச்சர் ராமேஸ்வர் டெலி, ஜூலை 2021-இல் பிரதான் மந்திரி உஜ்வாலா  யோஜனா திட்டப் (PMUY) பயனாளி களுக்கான மறு நிரப்புதலின் மதிப்பு 834 ரூபாய் 50 காசுகள் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இது தற்போது 2022 ஜூலையில் ரூ. 853 ஆக அதிகரித்துள்ளது.  எல்பிஜி சிலிண்டர்களின் விலை  அதிகரித்து வரும் நிலையில், உஜ்வாலா திட்டத்தின் பய னாளிகள் மறு நிரப்புதலை நாட வில்லை. அரசாங்கத்தரவுகளின் படி, கடந்த நிதியாண்டில் 50 சத விகிதத்திற்கும் அதிகமான பய னாளிகள் நான்கு அல்லது அதற்கும் குறைவான மறு நிரப்புதல் களையே நாடியுள்ளனர். 2021-22 நிதியாண்டில் மொத்தம் 9 கோடியே 34 லட்சம் பிரதான் மந்திரி  உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளில் 19.5 சதவிகிதம் அல்லது 1 கோடியே 81 லட்சம்  பேர் மட்டுமே நான்கு சிலிண்டர் களுக்கு மேல் நிரப்பியுள்ளனர். 5  கோடியே 41 லட்சத்து 22 ஆயி ரத்து 389 பேர் அல்லது கிட்டத்தட்ட 58 சதவிகித பிரதான் மந்திரி உஜ்வா லா யோஜனா (PMUY) பயனாளி கள் 2021-22 நிதியாண்டில் நான்கு அல்லது அதற்கும் குறைவான மறு நிரப்புதல்களைப் பெற்றுள்ளனர். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ்  (PMUY) அல்லாத வாடிக்கை யாளர்களுக்கான மறுநிரப்புதல் மதிப்பு 2021 ஜூலையில் 834 ரூபாய்  50 காசுகளில் இருந்து 2022 ஜூலை யில் ஆயிரத்து 53 ரூபாயாக அதி கரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

ஒருபுறம் சமையல் எரிவாயு வுக்கு வழங்கப்படும் மானியம் கடுமையாக வெட்டப்பட்டு, ஏறக் குறைய இல்லை என்றாக்கப்பட்டு விட்டு நிலையில், மறுபுறம் அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.  சமையல் எரிவாயு சிலிண்டர் மறு நிரப்புதலில் ஏற்பட்டுள்ள இந்த சரிவுக்கு, மக்களின் உணவுப்  பழக்கம், வீடுகளின் அளவு, சமையல் பழக்கம், மாற்று எரிபொருட்கள் கிடைப்பது என பல காரணிகளைக் கூறினாலும், அடிப்படையில் ஏழைகளுக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்துவரும் அதன் விலையும், மானிய வெட்டும்தான் முக்கியமானதாக கூறப்படுகிறது.  இதுவே 16 சதவிகிதம் பேர்  எரிவாயு சிலிண்டர்களை மறுநிரப்பு தல் செய்யாமல் விடுவதற்கு கார ணம் என்பது உறுதியாகிஇருக்கிறது. இதுதொடர்பாக, மாநிலங்கள வையில் டாக்டர் வி. சிவதாசன் எம்.பி.க்கு அளித்துள்ள பதிலில் “2021-22 ஆம் ஆண்டில் வெறும் 242  கோடி ரூபாய் மட்டுமே மானியமாக  வழங்கப்பட்டது” என்று தெரி வித்துள்ளார். மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட கடந்த ஐந்து  ஆண்டுகளுக்கான தரவுகள், 2021-22-இல் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானியமே வழங்கப்பட வில்லை என்பதை வெளிச்சத்திற் குக் கொண்டு வந்திருக்கின்றன. 

மேலும், இத்திட்டத்திற்கான மானியம் 2020-21இல் ரூ. 76 கோடியாகவும், 2019-20,ல் ரூ. 1,446  கோடியாகவும், 2018-19ல் ரூ. 5,670  கோடியாகவும், 2017-18ல் ரூ. 2,559 கோடியாகவும் இருந்துள்ளது. 

நேரடி பணப்பரிமாற்றம் (Direct Benefit Transfer - DBT) திட்டம் மூலமான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2022-இல் நேரடி பணப்பரிமாற்றம் வெறும் ரூ. 242 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டு உள்ளது. 2020-21இல் ரூ. 36 கோடியே 58 லட்சம், 2019-20இல்  ரூ. 227 கோடியே 26 லட்சம், 2018-19இல் ரூ. 315 கோடியே 39 லட்சம்,  2017-18இல் ரூ. 209 கோடியே 05  லட்சம் என்ற அளவிலேயே மானி யம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், உஜ்வாலா யோஜனா திட்டத்தில் மக்கள் ஆர்வம் குறைந்து வருகிறது என்ற தகவல்கள் அரசின் காதுகளுக்குச் சென்ற நிலையில்தான், 2022-23 நிதியாண்டில் 12 சிலிண்டர்கள் வரை ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று மோடி அரசு அவசர அவசர மாக அண்மையில் அறிவித்தது. எனினும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தை எதைச் சொல்லி பிரதமர் மோடி துவங்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 

;