states

img

தில்லி விவசாயிகள் போராட்டத்தை அட்டைப்படமாக வெளியிட்ட டைம்ஸ் இதழ்

குஜராத்தில் 2 ஆண்டுகளில் 313 சிங்கங்கள் பலியாகி உள்ளனர்.
குஜராத்தின் ஜூனாகர் மாவட்டத்தில் கிர் தேசிய பூங்கா உள்ளது. இந்நிலையில் கிர் பூங்காவில் எத்தனை சிங்கங்கள் உள்ளன என்று லாதி தொகுதி எம்எல்ஏ கேள்வி எழுப்பி இருந்தார் இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த வனத்துறை அமைச்சர் கண்பத் வாசா கூறியதாவது:-
கடந்த 2019 ஜனவரி முதல் 2020 டிசம்பர் வரையிலான இரண்டு ஆண்டுகளில் குஜராத்தில் மொத்தம் 313 சிங்கங்கள் பலியாகியுள்ளது. அவற்றில், 69 ஆண் சிங்கங்கள் இயற்கையாகவும், இரண்டு இயற்கைக்கு மாறாகவும், 77 பெண் சிங்கங்கள் இயற்கை இயற்கையாகவும், 13 இயற்கைக்கு மாறாகவும் பலியாகியுள்ளது.மேலும், 144 சிங்க குட்டிகள் இயற்கையாகவும், 8 இயற்கைக்கு மாறாகவும் பலியாகியுள்ளதாக தெரிவித்தார்.சிங்கங்களின் கணக்கெடுப்பு 2020இன் படி, குஜராத்தில் 674 ஆசிய சிங்கங்கள் உள்ளது. இது 2015 கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 29 சதவீதம் அதிகமாகும். 
 

;