states

பிரிட்டிஷ் ஆட்சியை விட...

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆட்சி காலத்தைவிட  மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார அசமத்துவம் அதிகரித்துள்ளது.  பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1880ல் ஆண்டுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் (இன்றைய மதிப்பில் சுமார் 20 முதல் 25 லட்சம் கோடியை) பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நேரடி வசூல் மற்றும் தொழில்கள் மூலமாக கொள்ளை அடித்தது என காரல் மார்க்ஸ் கூறுகிறார். அந்த சூழலில் கூட 1922ம் ஆண்டு இந்தியாவின் முதல் 1% பணக்காரர்கள் 13% தேசிய வருமானத்தை வளைத்தனர். ஆனால் 2022ம் ஆண்டு மோடி ஆட்சியில் உயர்மட்ட 1% பணக்காரர்கள் 22.5% வருமானத்தையும் 40% சொத்தையும் வளைத்துக் கொள்கின்றனர். வருமானம், செல்வம் இரண்டிலுமே சமத்துவம் அதீதமாக அதிகரித்துள்ளது. மோடி ஆட்சியின் கூட்டு கொள்ளை முதலாளித்துவ கொள்கைகளின் விளைவு இது!

வருமான அசமத்துவம்

கீழ்மட்ட 50% சாதாரண மக்களின் வருமானம்    15%       
நடுவில் உள்ள 40% பேரின் வருமானம்    27.3%       
மேல்மட்ட 10% பேரின் வருமானம்    57.7%       
மேல்மட்ட 1% பேரின் வருமானம்    22.6%     

சொத்து அசமத்துவம்

கீழ்மட்ட 50% சாதாரண மக்களின் சொத்து    6.4%       
நடுவில் உள்ள 40% பேரின் சொத்து    28.6%       
மேல்மட்ட 10% பேரின் சொத்து    65.0%       
மேல்மட்ட 1% பேரின் சொத்து    40.1%     

டாலர் பில்லியனர்கள் (8500 கோடி ரூபாய்க்கும் அதற்கு மேலும் சொத்து)

வருடம்    டாலர் பில்லியனர் எண்ணிக்கை    நிகர தேசிய வருமானத்தில்                             பில்லியனர்களின் சொத்து       
1988    1    1.7%       
1994    2    1.3%       
2000    9    7.0%       
2004    8    4.6%       
2014    51    10.9%       
2022    162    24.6%     

(பில்லியனர்களின் எண்ணிக்கை 2024 தொடக்கத்தில் 200 ஆக உயர்ந்துள்ளது.)
*    2022ம் ஆண்டில் முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு- 54.12 லட்சம் கோடி.
*    முதல் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு- 27.52 லட்சம் கோடி.

உங்களுக்கு தெரியுமா?

*    கீழ்மட்ட 50% சாதாரண உழைப்பாளிகள் ஜி.எஸ்.டி.யில் 64% தருகின்றனர். ஆனால் மேல்மட்ட 10% பணக்காரர்கள் 3% ஜி.எஸ்.டி.தான் தருகின்றனர். 
*    இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் சொத்தின் மூலம் 
*    சுகாதார அமைச்சகத்தின் செலவுகளை 30 ஆண்டுகளுக்கு அல்லது
*    கல்வி அமைச்சகத்தின் செலவுகளை 23 ஆண்டுகளுக்கு அல்லது
*    MGNREGA திட்டத்தை 38 ஆண்டுகளுக்கு செயல்படுத்த முடியும்.
*    அம்பானி ஒரு மணி நேரத்தில் ஈட்டும் வருமானம் ஒரு விவசாய தொழிலாளி ஈட்டுவதற்கு 10,000 ஆண்டுகள் ஆகும்.


அதீத அசமத்துவம் சமூகத்தின் மிகப்பெரிய கேடு! அசமத்துவத்தை அகற்ற பாஜக ஆட்சியை அகற்றுவது மிக அவசியம்! பாஜக ஆட்சியை தோற்கடிப்போம்! அசமத்துவத்தை  வீழ்த்துவோம்! 

- அ. அன்வர் உசேன்