states

img

மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து

புதுதில்லி, நவ.29- நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவ.29-  (திங்கள்) அன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங் களை ரத்து செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறை வேற்றப்பட்டது. மோடி அரசின் கொடிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்திய விவ சாய வர்க்கம், தொழிலாளி வர்க்கத்து டன் இணைந்து பிரம்மாண்டமான எழுச்சிமிக்க போராட்டங்களை நடத்தினர். இந்த மகா எழுச்சி நவம்பர் 26-அன்று ஓராண்டை எட்டவிருந்த நிலையில் நவம்பர் 19-அன்று பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.

மோடி கூறியதன் அடிப்படையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான திங்களன்று மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கான மசோதா முதலில் மக்களவையிலும், பின்னர்  மாநிலங்களவையிலும் நிறைவேற்றப் பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஒப்பு தலுக்காக அனுப்பப்பட உள்ளது. விவாதிக்க அனுமதியில்லை ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோது,  மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் இது குறித்து விவாதிக்க அனு மதிக்க வேண்டுமென திமுக, காங்கிரஸ், இடதுசாரி உறுப்பினர் கள் வலியுறுத்தினர். மக்களவை சபாநாயகர் ஓம்  பிர்லா, அவை முறையாக செயல்பட  அனுமதிக்காவிட்டால் விவா தத்திற்கு அனுமதியில்லை என்றார். இந்த வார்த்தையை அவர் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்.

பின்னர் மசோதாவை அறிமுகப் படுத்துமாறு வேளாண் அமைச்சர்  தோமரை ஓம் பிர்லா கேட்டுக்கொண் டார்.  ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர் கள் தொடர்ந்து இந்த மசோதா  மீது விவாதம் நடத்த வேண்டு மென தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சியினர் முழக்கத்தை “அமளி செய்கிறார்கள்” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதா குறித்து விவாதிக்க வேண்டு மென வலியுறுத்தினர். மசோதா வில்  பரிசீலனை மற்றும் நிறை வேற்றம்  என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது எனக்கூறி சபாநாயகர் இருக்கையை முற்றுகை யிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஓம் பிர்லா,  “மசோதாவை விவா திக்கும் வழி இதுவல்ல” என்று குறிப்பிட்டார். கடைசியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஒத்திவைப்புத் தீர்மானம்

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக போராட்டத்தின்போது உயி ரிழந்த விவசாயிகளின் குடும்பங் களுக்கு இழப்பீடு வழங்க வலி யுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி உள்ளிட்ட பலர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சபாநாயகரிடம் அளித்தனர். அந்த நோட்டீசில், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் பதிவை உருவாக்க வேண்டும். அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல், “போராட்டத் தின்போது கடந்த ஓராண்டில் உயிரி ழந்த 700 விவசாயிகளின் குடும்பங் களுக்கு இழப்பீடு வழங்க” வலி யுறுத்தி மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசை விருது நகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அளித்தார். தொடர்ந்து, பல்வேறு நாடாளு மன்ற உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர்.

காங்கிரஸ் போராட்டம்

முன்னதாக காங்கிரஸ்  தலைவர்  சோனியா காந்தி மற்றும்  ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்ட ங்களை ரத்து செய்ய வலியுறுத்தி  காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் போராட்டம் தொடரும்

இதனிடையே வேளாண் சட்டங்களை ரத்து செய்து நாடாளு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது குறித்து சம்யுக்த கிஷான் மோர்ச்சா தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்ற ப்பட்டது போராட்டத்தில் உயி ரிழந்த 750 விவசாயிகளுக்கு செலுத்தப்படும் அஞ்சலியாகும். குறைந்தபட்ச ஆதாரவிலை உள்பட மற்ற பிரச்சனைகள் இன்னும்  நிலுவையில் உள்ளதால் போராட்டம் தொடரும்” என்றார். மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கிடையே புதிய வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

;