states

ஜிஎஸ்டி கவுன்சில் குழுவில் தமிழக நிதி அமைச்சர் சேர்ப்பு

புதுதில்லி, செப்.26- ஜிஎஸ்டி கவுன்சில் அமை ப்பின் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒன்றிய நிதி யமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் சீர்திருத்தக் குழுவில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார், தில்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த சவுதாலா, அசாம் மாநில நிதியமைச்சர் அஜிதிங் நியோங், சத்தீஸ்கர் மாநில வர்த்தக அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  மேலும், ஒடிசா மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்  பழனிவேல் தியாகராஜன் ஆகி யோரும் உறுப்பினர்களாக நிய மிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி குழுவில் நிதி யமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ்சதுர்வேதி உட்பட 33 பேர் இடம் பெற்றுள்ளனர். தகவல் தொழில்நுட்ப ரீதியில் ஜிஎஸ்டி வரி வசூலில் உள்ள சிக்கல்களை சரி செய் வது தொடர்பாகவும், ஒன்றிய- மாநில அரசுகளுக்கு இடை யிலான நிதிப்பகிர்வில் இருக்கக் கூடிய சிக்கல்களை சீர் செய்வ தற்கும் இந்தக் குழு முயற்சி களை செய்யும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.  இந்நிலையில், இந்தக் குழு வில் தாம் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

;