புதுதில்லி தேர்தல் ஆணையம், மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
மேற்கு வங்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மேற் கொண்டு வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கை யை எதிர்த்து (1.36 கோடி வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக) தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளி யன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம், மேற்கு வங்க அரசு என இருதரப்பு வாதத்திற்குப் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, “தேர்தல் ஆணையத்திற்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே நிலவும் மோதல் கடும் அதிருப்தியை ஏற் படுத்துகிறது. எஸ்ஐஆர் பணிகளை குறித்த காலத்தில் முடிக்கப்படாவிட்டால், கடு மையான ஜனநாயகச் சிக்கல்களை உரு வாக்கும். இதனைத் தேர்தல் ஆணைய மும் மேற்கு வங்க மாநில அரசும் உணர வேண்டும். குறிப்பாக பழிபோடும் விளை யாட்டு மேற்கு வங்கத்தில் நடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் இடையே புகார்கள் பரிமாறப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எஸ்ஐ ஆர் பணிகள் நடுநிலையுடன் முடிக்க வேண்டும். தேவைப்பட்டால் நீதித்துறை அதிகாரிகள் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி களை நியமிக்க வேண்டியிருக்கும்” என எச்சரிக்கை விடுத்தது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக மேற்குவங்கத் தில் நீதிபதிகள் கொண்ட சிறப்புக்குழு வை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
