states

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் திடீர் மாற்றம் செய்ததற்கு எதிராக வழக்கு

ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி,செப்.21- மருத்துவ முதுநிலை சிறப்பு படிப்புகளுக் காக ‘நீட் எஸ்எஸ்’  நுழைவுத் தேர்வுக்கான அறி விப்பாணை வெளியான பிறகு தேர்வு நடை முறையில் திடீரென மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடுத்துள்ளனர்.  மருத்துவ முதுநிலை சிறப்பு படிப்பு களுக்காக ‘நீட் எஸ்எஸ்’ நுழைவுத் தேர்வு  நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பாணை கடந்த ஜூலை 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்பின் கடந்த ஆகஸ்ட் 31 அன்று மீண்டும் ஓர் அறிவிப்பாணை வெளியானது. இந்த அறிவிப்பாணையில், நுழைவுத் தேர்வு  நடைமுறையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதை எதிர்த்து 41 விண்ணப்பதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள னர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சந்திரசூட், நாக ரத்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஒன்றிய  அரசு, தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ்அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின்  விசாரணை செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.

;