states

மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

புதுதில்லி,செப்.24- மேகதாது அணை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏதேனும் உத்தரவு  பிறப்பித்த பின்னரே, மற்ற வழக்கு கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள் ளது. தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பா யம், கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை தொடர்பாக கட்டுமானம், சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை  தேசிய பசுமை தீர்ப்பாயம் முடித்து வைத்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான் வில்கர் அமர்வு முன்பு இந்த வழக்கு விசா ரணைக்கு வந்தது.அப் போது, தமிழக அரசின் சார்பில், ‘சட்ட விதிகளுக்கு உட் பட்டு தென்மண்டல பசுமை தீர்ப்பா யம், மேகதாது அணை தொடர்பாக கட்டு மானம், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிந்து குழு  அமைத்தது. இவ்விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவை கலைத் jது மட்டுமின்றி, தடையும் விதித்தது’ என்று தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசின் தரப்பில், மேகதாது விசயத்தில் தமிழ்நாடு தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக கூறப்பட்டது.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ‘மேகதாது விசயத்தில் நிலு வையில் உள்ள வழக்குகளை விசாரித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு உத்தர வை பிறப்பிக்க வேண்டும். அதுவரை உச் சநீதிமன்றத்தால் எவ்வித உத்தரவும் பிற ப்பிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது.

;