states

இதுவரை 80 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

புதுதில்லி,செப்.19- நாட்டில் இதுவரை 80 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க  தடுப்பூசி  செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது.  முதல் கட்டமாக சுகாதாரப் பணி யாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 80 கோடி டோசுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய  சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட வியா தெரிவித்துள்ளார்.  இந்த புதிய சாதனைக் காக நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்ப தாக அமைச்சர் கூறியுள்ளார். முதல் 10 கோடி டோஸ் தடுப்பூசி போடுவதற்கு 85 நாட்கள் ஆனது. ஆனால், 70 கோடி தடுப்பூசியில் இருந்து 80 கோடி தடுப்பூசி போட்டு முடிக்க வெறும் 11 நாட்கள்தான் ஆனதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

;