states

img

தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள் மோடி எங்களுக்கு ஒரு அரசு தேவை - அருந்ததிராய்

 

 

அருந்ததி ராய்
4 மே, 2021.

எங்களுக்கு ஒரு அரசாங்கம் தேவை. நம்பிக்கை இழந்த நிலையில் கேட்கிறோம் . அப்படியான ஒன்று எங்களிடம் இல்லை. எங்களுக்கு சுவாசம் அற்றுப்போகிறது. நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம். கைவசம்  உதவி  இருந்தும் கூட,  என்ன செய்வது என்று தெரிந்துகொள்ள எங்களிடம் கட்டமைப்புகள் இல்லை.

என்ன செய்ய முடியும்?  இங்கு இக்கனம்?

2024 வரை நாங்கள் காத்திருக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடியிடம் எதற்கும் வேண்டுகோள் விடுக்கும் நாள் வரும் என்று என்னைப் போன்றவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். தனிப்பட்ட முறையில், நான் அதைச் செய்வதை விட சிறைக்குச் சென்றிருப்பேன். ஆனால் இன்று, நாங்கள் எங்கள் வீடுகளில், தெருக்களில், மருத்துவமனை வாகன நிறுத்தங்களில், பெரிய நகரங்களில், சிறிய நகரங்களில், கிராமங்களில், காடுகள் மற்றும் வயல்களில் இறக்கும் போது - நான், ஒரு சாதாரண தனி குடிமகன், எனது கோடிக்கணக்கான சக குடிமக்களுடன் சேர என் பெருமிதத்தை விழுங்குகிறேன். ஐயா, தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

குறைந்தபட்சம் இப்போதைக்கு. நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், பதவி விலகுங்கள்.

இது நீங்கள் உருவாக்கிய  நெருக்கடி. நீங்கள் அதை தீர்க்க மாட்டீர்கள். அதை உங்களால் மோசமாக்க மட்டுமே முடியும். பயம், வெறுப்பு மற்றும் அறியாமைச் சூழலில் இந்த வைரஸ் செழித்து வளர்கிறது. யாரெல்லாம் பேசுகிறார்களோ அவர்களை நீங்கள் இறுக்கி அடக்கும்போது அது செழித்து வளரும். நிலவும் உண்மை சர்வதேச ஊடகங்களில் மட்டுமே தெரிவிக்கப்படும் அளவிற்கு நீங்கள் ஊடகங்களை நிர்வகிக்கும் போது அது செழித்து வளரும். ஒரு பிரதம மந்திரி தனது பதவியில் இருந்த அனைத்து ஆண்டுகளிலும் , கேள்விகளைக் சந்திக்ககத் தகுதியற்று ஒருபோதும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தாதபோது, திகிலூட்டும் இந்த தருணத்தில் கூட அது செழித்து வளரும்.

நீங்கள் போகாவிட்டால், எங்களில் நூறாயிரக்கணக்கானவர்கள் தேவையில்லாமல் இறந்துவிடுவார்கள்.
எனவே, இப்போது செல்லுங்கள். ஜோலா உத்த கே.
உங்கள் கண்ணியம் கலையாமல் அப்படியே  தியானம் மற்றும் தனிமை ஆகியவற்றுடன் ஒரு சிறந்த வாழ்க்கையை உங்கள் முன் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் விரும்புவது இதுதான் என்று நீங்களே கூறியுள்ளீர்கள். இந்த வெகுஜன இறப்பை தொடர நீங்கள் அனுமதித்தால் அது சாத்தியமில்லை.

தற்போது உங்கள் கட்சியில் உங்கள் இடத்தைப் பிடிக்கக்கூடிய பலர் உள்ளனர். அவர்கள் அதை பெறவேண்டும் என மக்கள் அறிவார்கள் நெருக்கடியான இத்தருணத்தில் அரசியல் எதிரிகள் கூட. அந்த நபர் யாராக இருந்தாலும் - உங்கள் கட்சியைச் சேர்ந்தவர், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் ஒப்புதலுடன் - அரசாங்கத்திற்கும் நெருக்கடி நிர்வாகக் குழுவிற்கும் தலைமை தாங்க முடியும்.

மாநில முதலமைச்சர்கள் ஒரு சில பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும், இதனால் அனைத்து கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக உணரலாம். ஒரு தேசிய கட்சியாக இருப்பதன் மூலம் காங்கிரஸும் கமிட்டியில் இருக்க முடியும். அடுத்து விஞ்ஞானிகள், பொது சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள், அனுபவம் வாய்ந்த அதிகார வர்கத்தினர். இதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் இதுதான் ஜனநாயகம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு எதிர்க்கட்சி-முக்த் ஜனநாயகத்தை நீங்கள் கொண்டிருக்க முடியாது.

அது ஒரு கொடுங்கோன்மை என்று அழைக்கப்படுகிறது.

இந்த வைரஸ் கொடுங்கோன்மைகளை விரும்புகிறது.

இப்போது இதை நீங்கள் செய்யாவிட்டால், இந்த வெடிப்பு பெருகிய முறையில் ஒரு சர்வதேச பிரச்சினையாகவும், உலகிற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுவதால், இது இறையாண்மைக்கு நாம் கடுமையாகப் போராடியதை சமரசம் செய்கிறது. நாம் மீண்டும் காலனியாக மாறுவோம். அது ஒரு சாதகமான வாய்ப்பு. இதை நீங்கள் புறக்கணிக்க முடியாது.

எனவே தயவுசெய்து செல்லுங்கள். இது நீங்கள் மிகவும் பொறுப்பாகச் செய்ய வேண்டிய காரியம். எங்கள் பிரதமராக இருப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள்.

தமிழில் ரிசி.சரவணன்.

;