states

img

எம்.பிகள் இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம்

மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது  வேளாண் திருத்த சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக  காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இவர்களது இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாநிலங்களை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்தனர். எனினும், அவரது கோரிக்கையை ஏற்க வெங்கைய நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் வெளிநடப்பு செய்த காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

;