states

img

பாஜகவை வீழ்த்த மகாராஷ்டிரா விவசாயிகள் தீர்மானம்

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தின் அகோல்லில் மாபெரும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் அகில இந்திய விவசாய சங்க பொதுச்செயலாளர் அசோக் தாவ்லே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உறையற்றிய நிலையில், இறுதியில் வரவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை தோற்கடிக்க விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.