states

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் லக்னோ முதலிடம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்

புதுதில்லி,செப்.16-  இந்தியாவில் பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.இதில் லக்னோ நகரத்தில் அதிகளவிலான குற்றங்கள் நடந்துள்ளன.  நாடெங்கும் பெண்களுக்கு எதி ரான கொடுமைகளும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில்  19 பெரு நகரங்களில் பெண் களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.  இந்தியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையில் பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் பதிவாகி யுள்ளன.  இதற்கு அடுத்ததாக சென்னை நகரம் உள்ளது.  கோவை யில் சராசரியாக 1 லட்சம் பெண் களில் 9 பேருக்கு எதிராகக் குற்றச் சம்ப வங்கள் பதிவாகியுள்ளன.    சென்னை யில் சராசரியாக 1 லட்சம் பெண்களில் 13.4 பெண்களுக்கு எதிராகக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கடுத்து கேரள மாநிலம்  கொச்சி நகரில் 1 லட்சம் பெண்களில் 37.5 பேருக்கு எதிராகவும், மகாரா ஷ்டிரா தலைநகர் மும்பை நகரில் 1 லட்சம் பெண்களில் 53.8 பெண் களுக்கு எதிராகவும் கர்நாடக மாநி லம் பெங்களூருவில் 1 லட்சம் பெண் களில் 62.3 பேருக்கு எதிராகக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்ச எண்ணிக்கை யில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ முதல் இடத் தில் உள்ளது.  இங்கு சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 190.7 பேருக்கு எதிராகக் குற்றச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிவித்துள்ளது.  தலைநகர் தில்லியில் 2019 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.  ஆனாலும் 2020ம் ஆண்டில் அதிகமான பலாத்கார வழக்குகளில் தில்லிதான் முதலிடத்தில் இருக்கிறது. 2020ம் ஆண்டில் தில்லியில் 997 பலாத்கார வழக்குகளும், இரண்டாவ தாக ஜெய்ப்பூரில் 409 வழக்குகளும், மும்பையில் 322 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

ஊரடங்கு காலத்திலும் கொடுமைகள்

பெண்களுக்கு எதிரான குற்றங் கள் குறைந்தது குறித்து தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலி வால் கூறுகையில் “ பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்க ளை மட்டுமே என்சிஆர்பி  வழங்கு கிறது. ஆனால் கொரோனா பரவல் தடுப்பு  ஊரடங்கு  காரணமாக குற்றங்கள் குறைந்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. ஊரடங்கு  காலத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள், வீட்டுக்குள் நடந்த கொடுமைகள் குறித்து அவர்களால் காவல்துறையினரிடம் புகார் அளிக்க இயலவில்லை. சமீபத்தில் தில்லியில் நடந்த பலாத்காரங்கள் அனைத்தும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

 

;