கோட்டயம் மக்களவைத் தொகுதியின் எல்.டி.எப் வேட்பாளர் தாமஸ் சாழிக்கடன் (கேரள காங்-எம்) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஏற்றுமானூர் சட்டமன்ற தொகுதியில் குமரகம் கைப்புழாமுட்டியில் அமைச்சர் வி.என்.வாசவன் பயணத்தை துவக்கி வைத்தார். கே.கே.ராஜேஷ் தலைமை வகித்தார். சாலையோரம் காத்திருந்த தொழிலாளர்கள், முதியோர்கள், பெண்கள் சாழிக்கடனை மலர்தூவி வரவேற்றனர். இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.