states

சமூக நீதியில் கள்ள மவுனம்

புதுதில்லி, நவ.26- ஒன்றிய அரசின் தேசிய கல்விக்  கொள்கை சமூக நீதி குறித்து குற்றகரமான மவுனம் காக்கிறது என்று கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறியுள்ளார். சமூகரீதியில் நலிந்த பிரி வினருக்கு கல்வியின் மூலம்  அதிகாரம் அளிப்பது மற்றும் அவர் களை முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டு வருவது குறித்து கொள்கை எந்த பரிந்துரையையும் செய்யவில்லை எனவும் அவர் கூறினார். புதுதில்லியில் ஜன சமஸ்கிருதி ஏற்பாடு செய்திருந்த ‘‘உயர்கல்வி யில் கேரளத்தின் முன்னேற்றமும் சவால்களும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் ஆர்.பிந்து பேசினார். கல்வித் துறையில் நிதியுதவி வழங்குவது உட்பட அரசாங்கத்தின் பொறுப்புகள் குறித்து இந்தக் கொள்கை குறிப்பிடத்தக்க வகை யில் எதையும் கூறவில்லை. இட ஒதுக்கீடு பற்றி எதுவும் கூற வில்லை. யுஜிசியை வழிகாட்டு தல்கள் மற்றும் விதிமுறைகளை வெளியிடும் ஒரு ஆணையமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

;