states

img

தில்லி போராட்டப்பகுதியில்  இணைய சேவை துண்டிப்பு - கொடூர தாக்குதல் நடத்த திட்டமா?

தில்லியில் போராட்டப்பகுதியில் 
இணைய சேவை துண்டிப்பு - கொடூர தாக்குதல் நடத்த திட்டமா?
புதுதில்லி, 
விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிகளில் இண்டர்நெட் சேவையை துண்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி 60 நாட்களுக்கு மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் புதுதில்லியில் முகாமிட்டு போராடி வருகின்றனர். ஆனால் மோடி அரசு அதனை விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்ய மறுத்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கு தில்லி போலிசும் அனுமதி அளித்தது. ஆனால் இன்று மதியம் டிராக்டர் பேரணி துவங்கிய நிலையில் பல இடங்களில் காவல்துறை டிராக்டர்களை மறித்து தடியடி நடத்தினர். இதனால் பதட்டம் அதிகரித்தது மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை கலைக்க முயன்றனர். 
இதையடுத்து பல இடங்களில் விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ஆனால் விவசாயிகள் பல தடைகளையும் கடந்து டிராக்டர் பேரணியை முன்னெடுத்தனர். இந்நிலையில் ஒரு பகுதி விவசாயிகள் காவல்துறையின் அரணையும் மீறி தில்லி செங்கோட்டைக்குள் புகுந்தனர். இதையடுத்து பல இடங்களில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக விவசாயிகள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். இதில் ஒரு விவசாயி பலியாகியுள்ளார். பல படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சிசைக்கு எந்த வித ஏற்பாடுமின்றி தவிக்கின்றனர்.
கொடூர தாக்குதல் நடத்த திட்டம்
இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சங்பரிவார் அமைப்புகள்  திட்மிடடிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இன்று இரவு காவல்துறையை கொண்டு விவசாயிகள் மீது கொடூர தாக்குதலை ஒரு புறம் மோடி அரசு நடத்தும் அதே வேலையில், தில்லி நகரத்தின் முக்கிய பகுதிகளில்  சங்பரிவார் அமைப்பினரும் மிகப்பெரிய வன்முறையை உருவாக்கி அந்த பழியை விவசாயிகள் மீது சுமத்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் விவசாயிகள்  போராட்டம் நடந்து வரும் பகுதிகளில் இண்டர்நெட் நெட் சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் தற்காலிகமாக துண்டித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இது வன்முறையாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும் என பலரும் விமர்ச்சித்து வருகின்றனர். இணை துண்டிப்பின் மூலம் என்ன நடக்கிறது என்பது உடனுக்குடன் வெளியுலகிற்கு தெரிவிக்க இயலாது. இதனால் தலைநகர் தில்லியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. 
 

;